தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடியில் வழக்கில் ஆஜராகி விட்டு வந்த இளைஞர் வெட்டிக்கொலை..! பழிக்கு பழியாக நடந்ததா என போலீசார் விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 8:19 AM IST

Thoothukudi Youth Murder: தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜராகிவிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

youth hacked to death after appearing in court in Thoothukudi
தூத்துக்குடியில் வழக்கில் ஆஜராகி விட்டு வந்த இளைஞர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி: முறப்பநாடு அருகே உள்ள பக்கபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (28). இவர் சில வருடங்களுக்கு முன்பாக 17 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் வடிவேல் முருகனுக்கும் அந்த பெண்ணுக்கும் குழந்தை பிறந்துள்ளது.

திருமணம் ஆகி சில வருடங்கள் ஆனதால் இருவரும் சேர்ந்து வாழ்வதற்காகப் பெண்ணின் தந்தை தான் அளித்த போக்சோ வழக்கை முடித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நேற்று (பிப்.28) நீதிமன்றத்தில் வடிவேல் முருகன் ஆஜராகி உள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வடிவேல் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, தெய்வச்செயல்புரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை போலீசார் வடிவேல் முருகன் உடலை மீட்டு விசாரணையைத் துவங்கினர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வைத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்ததாக வடிவேல் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகப் பழிக்குப் பழியாக வடிவேல் முருகன் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:அமைச்சர் கொடுத்த விளம்பரத்தில் சீன கொடி.. திமுகவின் தேசப்பற்று குறித்து பிரதமர் விமர்சனம்.. கனிமொழி ரியாக்‌ஷன் என்ன?

ABOUT THE AUTHOR

...view details