தமிழ்நாடு

tamil nadu

அதிக வேட்பாளர்களக் கொண்ட கரூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி தீவிரம்! - lok sabha election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 9:27 PM IST

Karur Lok Sabha Election: கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்றது.

அதிக வேட்பாளர்களை கொண்ட கரூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி தீவிரம்
அதிக வேட்பாளர்களை கொண்ட கரூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி தீவிரம்

கரூர்: தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிந்தது. இன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நான்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை சட்டமன்ற தொகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை சட்டமன்ற தொகுதி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் என ஆறு சட்டமன்ற தொகுதிகளில், 1670 வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம், 8000 மின்னணு வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணியில் தீவிரவாக ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடி மையங்களில், பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVM Machine) தான்தோன்றிமலை யூனியன் அலுவலகத்திலிருந்து இருந்து, வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடிக்கு நான்கு வீதம்- 1284 ,VV Pad 348, Control Unit 321, என 1953 இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இது தவிர, Ballet Unit, Voting Compartment முதியவர்களுக்கான நாற்காலிகள் உள்ளிட்ட வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு மண்டல அலுவலர்கள், துணை மண்டல அலுவலர்கள் தேர்தல் அதிகாரி, காவல்துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக இப்பணியினை கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் பிரதிநிதிகள் உடன் இருந்தனர். அதனைதொடர்ந்து வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்கள் முன்னிலையில் வாகனங்களில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு வாகனத்தில் ஒரு மண்டலத்திற்குட்பட்ட 10 முதல் 12 வாக்குச்சாவடி மையங்களுக்கு இயந்திரங்களை எடுத்துச் சென்றனர்.

மேலும் வாகனங்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. 20 வாகனங்களில் கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள 269 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு செலுத்து இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இப்பணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் 300க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:அன்று கழுதை! இன்று டிராக்டர்! மலைப்பாதையின் மலைக்க வைக்கும் கதை! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details