தமிழ்நாடு

tamil nadu

பாஜக உடன் கூட்டணி அமைத்தது ஏன்? - அன்புமணி ராமதாஸ் அளித்த விளக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 2:47 PM IST

PMK alliance with BJP: நாட்டின் நலன் கருதி பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

PMK alliance with BJP
PMK alliance with BJP

பாமக அன்புமணி ராமதாஸ் பேட்டி

விழுப்புரம்:நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து சந்திப்பதற்கான கூட்டணி ஒப்பந்தத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இடையே இன்று காலை ஒப்பந்தம் கையெழுத்தானது.

இக்கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, "பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.

நாட்டின் நலன் கருதி பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். 60 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பு உள்ளது.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதைப் பூர்த்தி செய்யவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெறும். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்"என்றார்.

இதன் பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது,"தமிழ்நாட்டின் தனிப் பெரும் சக்தியாக இருக்கக்கூடிய பாட்டாளிகளால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் பாமக, மிகவும் முக்கியமான ஒரு முடிவை எடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.

இந்தியாவினுடைய தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு இத்தகைய தருணத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களின் முழு அன்பைப் பெற்றவர் பாமக நிறுவனர் ராமதாஸ்.

தமிழக மக்கள் இந்த கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நாங்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சந்திக்க உள்ளோம். தமிழகத்தின் அரசியல் நேற்று இரவிலிருந்து மாறி உள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், பாட்டாளி மக்கள் கட்சி எடுத்து இருக்கக்கூடிய இம்முடிவால் தமிழக அரசியல் சூழ்நிலை தற்போது மாறி இருக்கிறது.

2026 இல் நாம் அனைவரும் நினைக்கக்கூடிய அரசியல் மாற்றம் தமிழ்நாட்டில் நிகழும். சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் ராமதாஸ் அவர்களை அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையோடு தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியினுடைய மூத்த தலைவராக ராமதாஸ் இருக்கப் போகிறார். வரவிருக்கும் நாடளுமன்ற தேர்தலில் பாமக 10 இடங்களில் போட்டியிட உள்ளனர். எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளனர் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்"என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல்!

ABOUT THE AUTHOR

...view details