தமிழ்நாடு

tamil nadu

"மக்களவைத் தேர்தல் வரை இந்தியா கூட்டணி நீடிக்காது" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 10:40 AM IST

Union Minister L Murugan: மக்களவைத் தேர்தல் வரை இந்தியா கூட்டணி நீடிக்காது. தேர்தலுக்கு முன் எந்த நேரத்திலும் உடைந்து போகும் என சத்தியமங்கலத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

ஈரோடு:சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், ரூ.11.74 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பாலம் கட்டுமான பணியினை, மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று (ஜன.24) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, "இந்தியா கூட்டணி உருப்படாத கூட்டணி. தேர்தலுக்கு முன் எந்த நேரத்திலும் உடைந்து போகும் கூட்டணி, கண்துடைப்புக்கான கூட்டணி, மக்களை ஏமாற்றும் கூட்டணி, மக்களவைத் தேர்தல் வரை இந்தியா கூட்டணி நீடிக்காது, சுக்கு நூறாக உடையும். கெஜ்ரிவாலுக்கும் காங்கிரஸ்க்கும், மம்தா பானர்ஜிக்கும் காங்கிரஸ்க்கும், கேரளாவில் கம்யூனிஸ்டுக்கும் காங்கிரஸ்க்கும் ஒத்து வராது என்று கூறினார்.

அயோத்தி ராமர் கோயில் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். இது 500 ஆண்டு கால போராட்டம். இது வெறும் கோயில் அல்ல மக்களின் உணர்வு, இலட்சியம், கனவாகும். மக்கள் இதை தீபாவளி போல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய தடை இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது. மக்களின் உணர்வுகளில் விளையாடும் திமுக அரசின் செயல்கள் மக்களிடையே கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை பொறுத்த வரை தேசிய தலைமை முடிவெடுக்கும். நீலகிரி தொகுதியில் களப்பணி செய்து வருகிறோம். தேர்தல் நேரத்தில் வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமை அறிவிக்கும். சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுப் பணிகள் முழுமையாக முடிந்த பின் வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து மத்திய அரசு அறிவிக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க முடியாது - ஆம்னி பேருந்துகள் சங்கம் திட்டவட்டம்!

ABOUT THE AUTHOR

...view details