தமிழ்நாடு

tamil nadu

எடப்பாடி பகல் கனவு காண்கிறார்; பிரதமர் தேர்வில் அமமுக பங்கு நிச்சயம் இருக்கும்: டிடிவி தினகரன் கருத்து!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 10:28 PM IST

TTV Dhinakaran: நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பிரதமரை தேர்வு செய்வதில் நிச்சயம் அமமுகவின் பங்கு இருக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

TTV Dhinakaran Press Meet
TTV Dhinakaran Press Meet

டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய டிடிவி தினகரன், "இந்தியாவின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் அமமுகவின் பங்கு நிச்சியம் இருக்கும், நான்கரை ஆண்டுகளாக ஊழல் ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆளுநர் புண்ணியத்தால் உள்ளே போகாமல் உள்ளனர். பழனிசாமிக்கு எல்லாம் தாத்தா நாங்கள் என்பது போல் ஸ்டாலின் தமிழ்நாடு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.

இந்தியா கூட்டணி முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருந்தது, தேர்தலுக்கு முன்னதாகவே இந்தியா கூட்டணி உடையும் என்று ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்ததுதான், கடைசியில் ஸ்டாலின் மட்டுமே அந்த கூட்டணியில் இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாகத் தேர்தல் கூட்டணி குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "இப்போது கூட்டணி குறித்து எதுவும் சொல்ல முடியாது, அதற்கான காலம் இன்னும் உள்ளது. தேர்தலில் போட்டியிடுவது எனது விருப்பம் இல்லை, ஆனால் எனது தொண்டர்கள் நான் போட்டியிட வேண்டும் என விரும்புவதால் அது குறித்து பரிசீலனை செய்வேன். 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும் என எடப்பாடி சொல்வது அவர் பகல் கனவு காண்பதைக் காட்டுகிறது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழக ஆளுநரின் செயல்பாடு அவருடைய பதவிக்கு இழுக்காக உள்ளது. இதையெல்லாம் தவிர்த்து விட்டு ஆளுநர் ஆளுநராகச் செயல்பட வேண்டும். அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர் செல்ஸ் எந்த நேரத்திலும் வெளிவரலாம் அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து ஸ்லீப்பர் செல் கண்காணித்து வருகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மகளை இழந்து வாடும் இளையராஜாவுக்கு இல்லம் தேடிச் என்று ஆறுதல் கூறிய கமல்ஹாசன்!

ABOUT THE AUTHOR

...view details