தமிழ்நாடு

tamil nadu

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 1:49 PM IST

Minister Mathiventhan Hospitalized: தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி

கோயம்புத்தூர்: தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மதிவேந்தன் குடலிறக்க (ஹெர்னியா) நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஜன.22) அவர் கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இன்று (ஜன.23) அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அறுவை சிகிச்சை முடிந்து அமைச்சர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மருத்துவமனைக்கு வரக்கூடும் என்பதால் மருத்துவமனை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details