தமிழ்நாடு

tamil nadu

தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஸ்கேட்டிங் போட்டிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் பள்ளி மாணவன்.. தமிழக அரசுக்கு மாணவனின் பெற்றோர் கோரிக்கை! - Tenkasi Student

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 4:02 PM IST

TENKASI STUDENT SELECTED FOR NATIONAL SKATING COMPETITION: தென்காசி அருகே தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்ச்சி பெற்ற மாணவன் குடும்ப வறுமை காரணமாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்தில் நடைபெறும்  சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வான தென்காசி மாணவன் பிரபு
தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வான தென்காசி மாணவன் பிரபு (CREDIT - ETVBharat TamilNadu)

தென்காசி மாணவன் பிரபு ஸ்கேட்டிங் செய்யும் காட்சி (CREDIT - ETVBharat TamilNadu)

தென்காசி: குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஆட்டோ ஒட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் பிரபு 10ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

பிரபுவுக்கு 2ஆம் வகுப்பு படிக்கும் போதே ஸ்கேட்டிங் விளையாட்டு மீது ஆர்வம் இருந்து வந்துள்ளதால் மகனின் ஆர்வம் அறிந்த பெற்றோர்கள் தங்களால் முடிந்த அளவு பயிற்சி மற்றும் அதற்கான உபகரணங்கள் வாங்கி கொடுத்து அதற்கான முயற்சியை எடுத்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, மாணவன் பிரபு மாவட்ட அளவிலும், மாநிலம் மற்றும் தேசிய அளவிலும் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டிகளில் தவறாமல் பங்கேற்று முதல் இடம், மூன்றாவது இடம் மற்றும் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.இந்த நிலையில் வருகின்ற ஜூன் 13 சர்வதேச அளவில் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்வதற்குத் தகுதி பெற்றுள்ளார்.

தாய்லாந்தில் நடைபெறும் போட்டிக்குச் சென்று வர ஒரு லட்சத்திற்கும் மேல் செலவாகும் என கூறப்படுகிறது. தற்போது ஒரு லட்சத்திற்கு மேலாகத் தேவைப்படுவதால் என்ன செய்வது என்று தெரியாமல் மாணவனின் ஆசையும், பெற்றோர்களின் கனவும் முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே மாணவன் பிரபுவை ஊக்கபடுத்தும் விதமாகவும், ஸ்கேட்டிங் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை செய்யும் வகையில் தாய்லாந்தில் நடக்க இருக்கும் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்வதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உதவ வேண்டும் என மாணவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டியில் குடிநீர் கிணற்றில் மலம்? ஆய்வில் கிடைத்த அந்தப் பொருள் என்ன? கலெக்டர் எடுத்த அதிரடி முடிவு..! - Human Feces In Well In Vikravandi

ABOUT THE AUTHOR

...view details