தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் இயங்கும் அரசுப் பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படாமல் இருப்பது ஏன்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 6:59 PM IST

Tamil Nadu govt bus: தமிழ்நாட்டில் இயக்கப்பட்டுவரும் அரசுப் பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படாமல், இருப்பதால் ஏற்பாடும் பாதிப்புகள் குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

Etv Bharat

திருப்பூர்:மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அனைத்து வாகனங்களுக்கும் இன்சூரண்ஸ், கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்தப் பேருந்துகளுக்கு வாகனக் காப்பீடு(insurance)செய்யப்படாததால், இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றன.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாலைப்போக்குவரத்து சிறப்பாக இருக்கிறது என்று பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் தான், நாட்டிலேயே அதிக அளவில் வாகன விபத்துக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதமும் இங்கே நிலவுகிறது.

தமிழகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இருக்கின்றன. இதில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1.3 லட்சம் பணியாளர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் அரசு போக்குவரத்துத்துறையில் ஊழியர் பற்றாக்குறையும் இருக்கிறது.இருந்த போதிலும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களும் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றன.

இன்சூரன்ஸ்:அரசுப் பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படாமல் இருக்கின்றது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. திருப்பூர் மண்டலத்தில் 540 மேற்பட்ட பேருந்துகள் அரசுப் பேருந்துகள் இயங்கி வருகின்றன.

இவற்றால் 2021ஆம் முதல் 2023 ஆண்டு வரை திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விபத்து வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றன. அரசு பேருந்துகளால் ஏற்பட்ட விபத்துகள் குறித்து 2021ஆம் ஆண்டு 30 வழக்குகள், 2022 இல் 32 வழக்குகள், 2023ல் 30 வழக்குகள் பதிவாகி உள்ளன.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2022ல் 14 பேருந்துகளும், 2023ம் ஆண்டில் 78 பேருந்துகளும் ஜப்தி செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ஜப்தி செய்யப்படும் பேருந்துகள் நீதிமன்றம் வளாகத்திலோ அல்லது நீதிமன்றம் கண்காணிப்பில் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலோ நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதன் பின்னர் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் நீதிமன்றத்தில் இழப்பீட்டினை உடனடியாக வழங்குவதாகக் கூறி உறுதிமொழி அளித்து பேருந்துகளை மீட்கிறார்கள். ஆனாலும் இழப்பீடு வழங்குவதில் தொடரும் இழுபறியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட போக்குவரத்துக் கழக வழக்குரைஞர் முருகேசன் கூறுகையில்,"இரண்டு ஆண்டுகளில் 92 பேருந்துகள் இழப்பீடு வழங்காமல் ஜப்தி செய்யப்பட்டு உள்ளது. பின்னர் இது குறித்த உறுதிமொழியின் பேரில் பேருந்துகள் விடுவிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆனாலும் பொதுமக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்காமல், தவணை முறையில் வழங்குகிறார்கள்.

இதனால் பொதுமக்கள் பாதிப்படைவது அதிகமாக இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளால் ஏற்படும் விபத்திற்கு, அரசு தனியாக நிதி ஒதுக்கிட வேண்டும்" என்றார் திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தரபாண்டியன் கூறுகையில்," மோட்டார் வாகனச்சட்டப்படி ஒவ்வொரு வாகனமும் இன்சூரன்ஸ் செய்த பின்னரே சாலையில் இயக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு மாநிலம் முழுவதும் எந்த ஒரு அரசுப் பேருந்துக்கும் இன்சூரன்ஸ் கிடையாது.

இதன் காரணமாக இந்தப் பேருந்துகளில் பொதுமக்கள் விபத்தில் சிக்கினால் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் கூட இழப்பீடு வழங்காமல் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இழுத்தடிக்கின்றன. மீண்டும் நீதிமன்றத்தை நாடி பேருந்துகளை ஜப்தி செய்து, இழப்பீடு கோர வேண்டி இருக்கிறது.

அதுவும் பல நேரங்களில் தவணை முறையில் வழங்கப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வாதாரம் தான் பாதிக்கப்படுகிறது. சிகிச்சை செலவிற்குப் பணமில்லாமல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கடன் சுமைக்கு ஆளாகி அதைக் கட்ட முடியாமல் அவதிப்படுவது, விபத்தில் குடும்பத்தில் முக்கிய நபர் இறந்து விட்டால் அந்தக் குடும்பமே வறுமையில் தத்தளிக்கும் நிலை எல்லாம் ஏற்படுகிறது. தமிழ்நாடும் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கக் கூடிய பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்பதே பலரின் பிரதானக் கோரிக்கை இருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க:விண்வெளி ஆராய்ச்சியில் குவியப்போகும் வேலை வாய்ப்பு - மயில்சாமி அண்ணாதுரை சொல்வது என்ன?

ABOUT THE AUTHOR

...view details