தமிழ்நாடு

tamil nadu

சிங்காரச் சென்னை 2.O - சென்னை வளர்ச்சிக்கான அதிரடி அறிவிப்புகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 11:21 AM IST

Tamilnadu Budget 2024: ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் சென்னையில் மேற்கொள்ள உள்ள நலத்திட்ட பணிகள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அரிவித்துள்ளார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

சென்னை:நடப்பாண்டிற்கானமுதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

இந்த பட்ஜெட்டில் சென்னையில் மேற்கொள்ள உள்ள நலத்திட்ட பணிகள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முதலாவதாக சிங்காரச் சென்னை இரண்டாவது திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பகுதியில் சாலைகளை விரிவுபடுத்துவதற்காக ரூ. 300 கோடியும், பெசன்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, வடசென்னை பகுதிகளில் புதிய குடியிருப்புகள், தொழிற்பயிற்சி மையங்கள், திறன்மிகு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ஏரிகள் சீரமைப்பு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரு.1000 கோடியும், அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ. ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் உள்ள பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்துவதற்கு ரூ. 430 கோடியில் புதிய திட்டம் அருமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:TN Budget Live Update: தமிழ்நாடு பட்ஜெட் 2024: முக்கிய அறிவிப்புகள் விவரம்!

ABOUT THE AUTHOR

...view details