தமிழ்நாடு

tamil nadu

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: தலைவர்கள் நினைவிடம் முதல் தொண்டர்கள் சந்திப்பு வரை.. முழுவிவரம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 7:38 AM IST

Updated : Mar 1, 2024, 11:40 AM IST

HBD MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை முதல் தொண்டர்கள் சந்திப்பு வரை, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன என்பது குறித்துக் காணலாம்.

CM mk stalin birthday
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இன்று

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71வது பிறந்தநாள் (மார்ச் 1) இன்று. அவரது பிறந்தநாளை திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் எனப் பலரும் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, அவரது பிறந்தநாளான இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 8 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, காலை 8.30 மணி அளவில் சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது தாயார் தயாளு அம்மாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளார்.

பின்னர் சி.ஐ.டி காலனி இல்லம் சென்று கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார். அதைத் தொடர்ந்து திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் செல்கிறார். அங்கு முதலமைச்சர் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெறும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அறிவாலயத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

இதையும் படிங்க: ஏற்றுமதியில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு! ஏற்றுமதி தரவுகள் சொல்வது என்ன?

Last Updated :Mar 1, 2024, 11:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details