தமிழ்நாடு

tamil nadu

"தமிழகத்திற்கு ரூ.10.76 லட்சம் கோடியை அள்ளிக்கொடுத்ததா பாஜக.. இது அப்பட்டமான பொய் கணக்கு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்! - TN CM MK Stalin Criticized Bjp

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 14, 2024, 4:28 PM IST

TN CM MK Stalin Criticized Bjp: கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.10.76 லட்சம் கோடியை அள்ளிக்கொடுத்ததாம் பாஜக அரசு. இது அப்பட்டமான பொய் கணக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய பாஜக அரசை விமர்சித்துள்ளார்.

TN CM MK Stalin Criticized Bjp
"தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.10.76 லட்சம் கோடியை அள்ளிக்கொடுத்ததா பாஜக

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X பக்கத்தில் பாஜக குறித்துப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.10.76 லட்சம் கோடியை அள்ளிக்கொடுத்ததாம் பாஜக அரசு. இது அப்பட்டமான பொய் கணக்கு, இதில் இரண்டு கூறுகள் உள்ளன.

1) மத்திய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி:

மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது.

இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்குக் கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.

2) மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாகச் செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு:

இதில், பாஜக காட்டியுள்ள பொய் கணக்குகள் என்னென்ன தெரியுமா?

  • இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.1,960 கோடி,
  • ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ. 63,246 கோடி,
  • சாகர் மாலா திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி,

ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு. இந்தத் திட்டங்களின் கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?

இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது,

தம் உழைப்பாலும், தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய ரூ.2.5 லட்சம் கோடி கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போலக் கூறிக்கொள்கிறது மத்திய பாஜக அரசு. எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை..! - One Nation One Election

ABOUT THE AUTHOR

...view details