தமிழ்நாடு

tamil nadu

மதுரை ரயில் நிலைய வளர்ச்சி பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஆய்வு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 10:41 PM IST

Southern Railway: மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கெளசல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

Etv Bharat
Etv Bharat

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் 347.47 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் இன்று (பிப்.13) ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை ரயில் நிலைய கிழக்கு நுழைவாயில் கட்டப்பட்டு வரும் புதிய முனையக் கட்டிடம், பல்லடுக்கு இருசக்கர வாகன நிறுத்துமிடம், உப மின் நிலையம், பெரியார் பேருந்து நிலையத்தையும் ரயில் நிலையத்தையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஆகியவற்றில் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து மேற்கு நுழைவாயில் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், ரயில் பாதைகளுக்கு மேற்புறம் கட்டப்பட இருக்கும் பயணிகள் வசதி மையத்திற்கான அடித்தளம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

அதேபோல் பார்சல் போக்குவரத்திற்காகக் கட்டப்படும் மேம்பாலம், நடை மேம்பால புனரமைப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்ததோடு தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

மேலும், இந்த ஆய்வின் போது கூடுதல் பொது மேலாளர் கெளசல் கிஷோருடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, கட்டுமான பிரிவு முதுநிலைப் பொறியாளர் நந்தகோபால், முதுநிலைக் கோட்ட பொறியாளர் சூரிய மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:திருடிய பதக்கத்தை திருப்பிக் கொடுத்த திருடன்.. இயக்குநர் மணிகண்டன் வீட்டு கொள்ளைச் சம்பவத்தில் திருப்பம்!

ABOUT THE AUTHOR

...view details