தமிழ்நாடு

tamil nadu

சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்து: சைதை துரைசாமியின் மகன் வெற்றி மாயம் எனத் தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 12:21 PM IST

ஹிமாச்சல பிரதேச மாநிலம் பாங்கி நாலா அருகே சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாலை விபத்து
சாலை விபத்து

சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலம் பாங்கி நாலா அருகே சட்லஜ் நதியில் நேற்று(பிப்.04) கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் காரில் இருந்து ஒருவரை சடலமாக மீட்டுள்ளனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், முதற்கட்ட விசாரணையில்,"கார் விபத்துக்குள்ளான தேசிய நெடுஞ்சாலை-5ல் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் நதியில் விழுந்துள்ளது. இந்த காரில் பயணம் செய்தவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மாயமான ஒருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது" எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கார் விபத்தில் சிக்கி மாயமானதாக கூறப்படும் நபர் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details