தமிழ்நாடு

tamil nadu

ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லாத விவகாரம் குறித்த அண்ணாமலை புகார் - சத்யபிரதா சாகு கூறியது என்ன? - lok sabha election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 8:16 PM IST

lok sabha election 2024: ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை என கோவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அண்ணாமலை அளித்த புகார் குறித்து, அந்த மாவட்ட அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லாத விவகாரம்; நடவடிக்கை எடுக்கப்படும் என சத்யபிரதா சாகு உறுதி
ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லாத விவகாரம்; நடவடிக்கை எடுக்கப்படும் என சத்யபிரதா சாகு உறுதி

சென்னை: 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என்பது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதேு அவர் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகப்படியாக தருமபுரி 67.52 சதவீதம், நாமக்கல் 67.37 சதவீதம் மற்றும் ஆரணி 67.34 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட காரணங்களினால் அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம். செப்டம்பர் முதல் மார்ச் 20ஆம் தேதி வரை வாக்காளர்கள் சரிபார்த்தல், சேர்த்தல், நீக்கல் செய்துள்ளோம். அப்போதே விடுபட்ட வாக்காளர்கள் சரி பார்த்திருந்தால், கடைசி நேரத்தில் அவர்களுக்கு இது போன்ற நிலை வராது” என தெரிவித்தார். மத்திய சென்னை நாம் தமிழர் வேட்பாளர் கைது குறித்த கேள்விக்கு, 49MA படி வாக்குச்சாவடி அலுவலரிடம் கோரிக்கை வைக்கலாம் எனவும், அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை என பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் பாஜக சார்பில் புகார் அளித்துள்ளார். அண்ணாமலை புகார் குறித்த கேள்விக்கு, அந்த புகார் குறித்து அங்குள்ள தேர்தல் அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வாக்காளர்களுக்கு விஜயின் அன்பு வேண்டுகோள்.. வாக்களித்தபின் எக்ஸ் பதிவு! - Tamil Nadu Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details