தமிழ்நாடு

tamil nadu

திண்டுக்கல் அருகே ரூ.3.10 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்! - gold seized

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 1:29 PM IST

Gold Seized: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சோதனை சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 3.10 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 10 CRORE WORTH GOLD SEIZED
3 10 CRORE WORTH GOLD SEIZED

திண்டுக்கல்:நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. மேலும் நாடாளுமன்றத் தேர்தல் நியமான மற்றும் சுமுகமான முறையில் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக வாகாளர்களுக்கு பணம் பட்டுவாட மற்றும் பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதை தடுக்கும் விதமாகா மாவட்டம்தோறும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருள்களை கொண்டு செல்லும் போது உரிய ஆவணங்கள் வைத்து இருக்க வேண்டும் இல்லை என்றால் அதிகாரிகளால் அவை பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, தேனி - மதுரை நெடுஞ்சாலையில் உள்ள வத்தலக்குண்டு சோதனை சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் (SST) சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது தேனியிலிருந்து வத்தலக்குண்டு நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 9 தங்க நகைகள் பெட்டிகள் இருந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தங்க நகைப் பெட்டிகளை ஏற்றி வந்த வாகனம் தனியார் நகைக்கடைக்குச் சொந்தமானது எனவும், உரிய ஆவணங்கள் இன்றி நகை எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் நிலக்கோட்டை தேர்தல் நடத்தும் துணை அலுவலர் மாரியிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பூங்கொடியின் உத்தரவின் பேரில், நகைகள் எடுத்துவரப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில் மொத்த வியாபாரத்திற்குக் கொடுப்பதற்காக கோவையிலிருந்து தேனி வந்தபோது வத்தலக்குண்டு சோதனை சாவடியில் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 9 பெட்டிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் தற்போதைய சந்தை மதிப்பு 3.10 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், உறிய ஆவணங்கள் இல்லாதா காரணத்தாலும் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் துணை தேர்தல் நடத்தும் அலுவலர் தனுஷ்கோடி முன்னிலையில் நிலக்கோட்டை சார்நிலை கருவூல அதிகாரி ஜோதியிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் 9 நகைப் பெட்டிகளையும் முறையாக முத்திரையிடப்பட்டு கருவூல காப்பக அறையில் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:இந்தியாவில் கைது செய்யப்பட்ட முதல் முதலமைச்சர் யார்? சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன? - Arvind Kejriwal Arrested First CM

ABOUT THE AUTHOR

...view details