தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை.. ஆலை உரிமையாளர்கள் கூறும் காரணம் என்ன? - Rice price hike reason

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 1:00 PM IST

Rice Mill Owners Accusation on TN and Union Govt: தமிழக அரசு உயர்த்திய 5 மடங்கு மின் கட்டணம் மற்றும் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியால்தான் அரிசி விலை உயர்ந்துள்ளது எனவும், இவற்றை ரத்து செய்ய வேண்டும் எனவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர் சங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Rice Mill Owners Accusation on TN and Union Govt
Rice Mill Owners Accusation on TN and Union Govt

மின் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரியால் தான் அரிசி விலை உயர்வு என அரிசி ஆலை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

திருச்சி:தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திருச்சியில் மாநில செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் மற்றும் அரிசி வணிகர்கள் கலந்து கொண்டு நெல் மற்றும் அரிசி ஆலைகள், அரிசி விற்பனை தொடர்பான தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் மோகன், "5 சதவீத ஜிஎஸ்டி வரி அதிகரிப்பால் தான் அரிசி விலை உயர்ந்து காணப்படுகிறது. நான்கு மாநிலங்களில் உள்ள இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் அரிசிக்கு விதித்துள்ள ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரிக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்.

மேலும் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.35 ஆக இருந்த மின்கட்டணம் ரூ.150 ஆக உயர்த்தி இருப்பது என்பது அரசு விலை உயர்வுக்கு மற்றொரு முக்கிய காரணம். அரிசி ஆலைக்கு மின்வெட்டிலிருந்து விலக்கு பெற்றிருந்தாலும், பிக் ஹவர்ஸ் நேரங்களில் அதிக மின் கட்டணம் வசூலிப்பதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மேலும் மார்க்கெட்டிங் கமிட்டி இடங்களில் விவசாயிகளிடம் மற்றும் பிற மாநிலத்தில் இருந்து வரும் அரிசிக்கு நேரடியாக பெறும்போது செஸ் வரி விதிப்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும்.

மேலும், மத்திய அரசால் வழங்கப்படும் பாரத் அரிசி 5, 10 கிலோ வழங்குவது ஏற்புடையதாக இல்லை. அதை 26 கிலோவாக வழங்கிட வேண்டும். விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், மற்ற பொருட்களை போன்று அரிசிக்கு விதிக்கப்பட்ட எம்எஸ்பி அதிகரித்ததால், அரிசி விலை உயர்ந்து இருந்தாலும், குறைக்க தேவையில்லை, அரிசியும் சீரான விலையில் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என உறுதிப்பட தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் வறட்சி, வெள்ளம் போன்றவை இருந்தாலும் அரிசி தட்டுப்பாடு இல்லை, அண்டை மாநிலங்களில் இருந்து அரிசி தட்டுப்பாடு இல்லாமல் வியாபாரிகளால் கொண்டு வரப்படுகிறது. மேலும் அரசால் இலவச அரிசியும், பாரத் அரிசியும் தடையின்றி கிடைக்கிறது" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இன்று தீர்ப்பு.. விசாரணையின் முழு விவரம்! - Professor Nirmala Devi Case

ABOUT THE AUTHOR

...view details