தமிழ்நாடு

tamil nadu

நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியம்? மதுரையில் அடிக்கடி நிகழும் விபத்துக்களால் பொதுமக்கள் அச்சம்! - Othakadai Accidents

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 2:15 PM IST

Othakadai Accidents: நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியம் காரணமாக மதுரை அருகே அடுத்தடுத்து நிகழும் விபத்துக்களிலிருந்து மக்களைக் காக்குமாறு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Othakadai Accidents
ஒத்தக்கடை தொடர் விபத்துகள்

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை முதல் உத்தங்குடி வரை செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலையில், முறையாகத் தடுப்புகள் அமைக்கப்படாத காரணத்தால், அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அடுத்துள்ள ஒத்தக்கடை பகுதியில், சாலையைக் கடக்கும் வகையில் தடுப்புகள் முறையாக அமைக்கப்படாமல், சென்டர் மீடியன் அமைத்துள்ளதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகின்றது. அந்த வகையில், இப்பகுதியில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும், பத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்ட நிலையில், சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் வந்த சிறுமி, சாலையைக் கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் இவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், குழந்தை தூக்கி வீசப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு, அடுத்தடுத்து ஒரே இடத்தில் பலமுறை விபத்து ஏற்பட்டும், அந்த பகுதியில் முறையாகத் தடுப்புகள் அமைக்கப்படாததால் விபத்து அதிகரித்து வருவதாக, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, உயிர்களைக் காக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: இருவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்? - Rameshwaram Cafe Blast 2 Arrest

ABOUT THE AUTHOR

...view details