தமிழ்நாடு

tamil nadu

மதுபோதையில் பின்னணி பாடகர் வேல்முருகன் வாக்குவாதம்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 10:32 PM IST

Updated : Mar 2, 2024, 10:46 PM IST

Folk Singer Velmurugan: பின்னணி பாடகர் வேல்முருகன் மது போதையில் இருந்ததாகக் கூறி, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அவரது விமான பயணத்தை ரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது போதையில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிரச்சனை செய்த பின்னணி பாடகர்?
மது போதையில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிரச்சனை செய்த பின்னணி பாடகர்?

மதுபோதையில் பின்னணி பாடகர் வேல்முருகன் வாக்குவாதம்

சென்னை: தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருபவர் வேல்முருகன். இவர் ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வேணாம் மச்சா வேணாம், நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் பல்வேறு பாடல்களைப் பாடி பிரபலமடைந்தார். மேலும், பிக்பாஸ் சீசன் 4-இல் போட்டியாளராக பங்கேற்றார்.

இந்நிலையில், வேல்முருகன் நேற்று மாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலமாக திருச்சி செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அப்போது, அவர் மது போதையில் இருந்ததாகக் கூறி, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் நாட்டுப்புறப் பாடகர், பாதுகாப்பு அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் விமான நிலைய அதிகாரிகள், அவர் செல்ல இருந்த குறிப்பிட்ட விமான பயணத்தை ரத்து செய்துள்ளனர். அதன்பின், நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் மன்னிப்பு கேட்டுக் கொண்டதன் பேரில், வேறு ஒரு விமானத்தில் திருச்சி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் கல்லூரி வாயிலில் மாணவி கொலை; இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

Last Updated : Mar 2, 2024, 10:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details