தமிழ்நாடு

tamil nadu

"திமுகவை புறக்கணிக்க மக்கள் தயாராக உள்ளனர்”.. எல்.முருகன் பேச்சு! - L Murugan Campaign

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 9:48 PM IST

L.Murugan: ஈரோடு பண்ணாரி அம்மன் கோயிலில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன், அம்மனை தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

Erode
ஈரோடு

பண்ணாரி அம்மன் கோயிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய பாஜக வேட்பாளர் எல். முருகன்!

ஈரோடு: நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களத்தில் இருக்கும் பாஜக நிர்வாகிகளை, வேட்பாளர் எல்.முருகன் சந்திக்கும் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எல்.முருகன், "பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா இன்று (மார்ச் 26) நடைபெற்று உள்ளது. சக்தி வாய்ந்த கோயிலில் அம்மனை தரிசித்து விட்டு தேர்தல் பணியை தொடங்கியுள்ளோம்.

நேற்று நீலகிரியில் பாஜக சார்பில் வேட்புமனுய்ஜ் தாக்கல் செய்துள்ளோம். இன்று நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என தரிசனம் செய்தேன். இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால சாதனைகள் குறித்தும், அவரின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து வாக்குகளை சேகரிப்போம்.

அதேபோல், பிரதமரை விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் இல்லாதவர் ஸ்டாலின். அவர் தோல்வி பயத்தில் உள்ளார். நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய ஆதரவு தமிழ்நாட்டில் உள்ளது. பிரதமர் வரும் இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டு, தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பது உறுதி. மக்கள் திமுகவை புறக்கணிப்பதற்கு தயராக உள்ளனர். இவை எல்லாம் ஸ்டாலினுக்கு தெரிந்ததால்தான் பிரதமரை விமர்சித்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:“சேஷு தமிழ் சினிமாவில் பிரபலமாகி ஒரு ரவுண்ட் வருவார் என நினைத்தேன்”,, லொள்ளு சபா இயக்குநர் இரங்கல்! - Seshu Passed Away

ABOUT THE AUTHOR

...view details