தமிழ்நாடு

tamil nadu

இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு! - NEET exam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 11:20 AM IST

NEET exam: தேசிய தேர்வு முகமை, இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றும் (ஏப்.9), நாளையும் (ஏப்.10) என இரு நாட்களுக்கு அவகாசம் வழங்கி உள்ளது. இதன் மூலம் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், ஏற்கனவே விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நினைப்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

NEET EXAM UPDATES
NEET EXAM UPDATES

சென்னை:இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதா, பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு இளநிலை நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA - National Testing Agency) நடத்தி வருகிறது. இந்த தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் கல்வியாண்டிற்கான தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பதிவு மேற்கொள்ள கடந்த பிப்.9ஆம் தேதி முதல் மார்ச் 16 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் 23 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த நிலையில், நீட் தேர்விற்கான விண்ணப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள மறுவாய்ப்பு கேட்டு கோரிக்கைகள் வந்துள்ளது.

அதன் அடிப்படையில், தேசிய தேர்வு முகமை, இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றும் (ஏப்.9), நாளையும் (ஏப்.10) என இரு நாட்களுக்கு அவகாசம் வழங்கி உள்ளது. இதன் மூலம் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், ஏற்கனவே விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நினைப்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் neet.nta.nic.inஎன்ற இணையதளம் வாயிலாக நாளை இரவு 10.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பத்திற்கான கட்டணத்தை நாளை இரவு 11.50 வரை செலுத்தலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட உயர் கல்விக் கட்டணத்தை உயர்த்த சுய நிதி கல்லூரிகள் கோரிக்கை! - Higher Education Fee Hike

ABOUT THE AUTHOR

...view details