தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 9:07 PM IST

Updated : Feb 13, 2024, 2:02 PM IST

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த நிலையில் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை :அமைச்சர் பதவியை அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த நிலையில் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்து உள்ளார். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ள செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் 230 நாட்களுக்கும் மேலாக இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் தான் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனது ராஜினாமா கடிதத்தை செந்தில் பாலாஜி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளார். முதலமைச்சர் அந்த கடிதத்தை, இன்று இரவு அல்லது நாளை ஆளுநருக்கு அனுப்பிய பின், செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் விடுவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சடலமாக மீட்பு!

Last Updated : Feb 13, 2024, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details