தமிழ்நாடு

tamil nadu

குலசை ராக்கெட் ஏவுதளத்தில் உள்ளூர் இளைஞருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை - மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்த அமைச்சர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 6:03 PM IST

Minister Anitha R.Radhakrishnan: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Minister Anitha R.Radhakrishnan
Minister Anitha R.Radhakrishnan

Minister Anitha R.Radhakrishnan

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகில் உள்ள அடைக்கலாபுரத்தில் பனைத் தொழிலாளர்களுக்கு மின் தூக்கி இயந்திரம் மூலம் பனை ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் திருச்செந்தூர் தொகுதியைச் சேர்ந்த படித்த மீனவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும், இஸ்ரோவில் அப்துல்கலாம் முதல் சிவன் வரை பல விஞ்ஞானிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

இதனால் தமிழகத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானிகளுக்கு குலசேகரப்பட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் வாய்ப்புகள் வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்குத் தேவையான உதிரிப் பாகங்கள் தயாரிக்கக் கூடிய தொழிற்சாலைகள் வரவுள்ளது.

இதனால் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறேன். பனை மரங்கள் ஏற வேளாண்துறை சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட மின் தூக்கி இயந்திரம் மூலம் இன்று சோதனை செய்யப்பட்டது.

பனைத் தொழிலாளர்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. உடன்குடி அனல் மின் நிலையத்தைச் சுற்றியுள்ள மீனவ கிராமத்தில் நூறு மீனவர்களுக்குப் படகு வெளி பொறுக்கும் இயந்திரம் இலவசமாக வழங்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னையில் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான குடோனில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை!

ABOUT THE AUTHOR

...view details