தமிழ்நாடு

tamil nadu

போலியான மருத்துவ சான்றிதழைச் சமர்ப்பித்த கைதிக்கு விடுப்பு நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. - Leave suspended for prisoner

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 10:26 PM IST

Madras High Court: போலியான மருத்துவ சான்றிதழைச் சமர்ப்பித்த கைதிக்குத் தற்காலிகமாக விடுப்பை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஏப்.25ஆம் தேதி காளிமுத்து (எ) வெள்ளை காளி குற்றவாளிக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், குற்றவாளிக்கு 15 நாட்கள் காவல்துறை பாதுகாப்புடன் விடுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் திரு.சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி, விடுப்பு தொடர்பான ஆவணங்களை, போலீசார் சரிபார்க்கும் போது போலி என்று தெரியவந்துள்ளது.

குற்றவாளி போலி ஆவணங்கள் மூலம் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி விடுப்பு பெற்றுள்ளதால் அவ்விடுப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், குற்றவாளியின் மீது மொத்தம் 37 வழக்குகள் உள்ள நிலையில் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்தார். அரசு தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், குற்றவாளியின் சாதாரண விடுப்பைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. தென்மத்திய ரயில்வே அறிவிப்பு! - Secunderabad Ramnad Special Trains

ABOUT THE AUTHOR

...view details