தமிழ்நாடு

tamil nadu

வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டை எண்ணக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன? - lok sabha election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 5:14 PM IST

Lok sabha election 2024: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

lok sabha election 2024
lok sabha election 2024

சென்னை:நாடு முழுவதும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சரிபார்ப்பு இயந்திரங்களை இணைத்து, அதில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ண உத்தரவிடக் கோரி பாக்கியராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், 541 தொகுதிகளில், 216 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விட, எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக இருந்தன. 126 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை விட, முடிவுகளில் குறைந்த வாக்குகள் எண்ணப்பட்டன எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய, ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ண உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு, இதே விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகக் கூறி, இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி.. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! - Nirmala Devi Case

ABOUT THE AUTHOR

...view details