தமிழ்நாடு

tamil nadu

மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா கோலாகலம்! - mailam murugan temple

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 1:25 PM IST

mailam murugan temple: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள உலக பிரசித்தி பெற்ற மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

mailam murugan temple
mailam murugan temple

விழுப்புரம்:திண்டிவனம் அடுத்த மயிலத்தில் உள்ள மயிலம் வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடை பெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 15 ந் தேதி அன்று காலை 6.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனைத் தொடர்ந்து கடந்த 19ம் தேதி இரவு தங்க மயில் வாகன உற்சவமும், 22ம் தேதி திருக்கல்யாணம் வெள்ளிக்குதிரைவாகன உற்சவமும் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மார்ச் 23) திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரை ஸ்ரீமத் சிவஞான பாலய 20ம் பட்டம் சுவாமிகள் வடம் பிடித்து இழுத்து வைத்தார்.

பக்தர்கள், 'முருகனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா' என உற்சாகமாக பக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து நாளை (மார்ச் 24) காலை பங்குனி உத்திர தீர்த்த வாரியும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து 25ம் தேதி் இரவு முத்துபல்லக்கு உற்சவமும் விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை ஸ்ரீமத் சிவ ஞான பாலய 20 ம் பட்டம் சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள்,ஊழியர்கள் என அனைவரும் சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த நிகழ்வில் தமிழ் நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், பக்தர்கள் அழகுகள் குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், மயிலம் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த தேர் திருவிழாவில் எந்த விதமான அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:அதிகாலையிலேயே வாக்கிங் சென்று வாக்கு வேட்டையில் ஈடுபட்ட முதல்வர்.. தஞ்சையில் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த மக்கள்! - Cm Stalin Collect Votes

ABOUT THE AUTHOR

...view details