தமிழ்நாடு

tamil nadu

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பேச்சிதுரையின் தாய் தொடர்ந்த வழக்கு: நெல்லை எஸ்.பி பதிலளிக்க மதுரை ஐக்கோர்ட் உத்தரவு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 10:37 PM IST

Pachithurai died in police firing: போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட கைதி பேச்சிதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி தாய் தொடர்ந்த மனு குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai-bench-orders-tirunelveli-sp-to-respond-in-case-filed-by-mother-of-pachithurai-died-in-police-firing
போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பேச்சிதுரையின் தாய் தொடர்ந்த வழக்கு: நெல்லை எஸ்.பி பதிலளிக்க மதுரை ஐக்கோர்ட் உத்தரவு..

மதுரை:போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட கைதி பேச்சிதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி தாய் தொடர்ந்த மனு குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

திருநெல்வேலி சேர்ந்த பழனியாச்சி என்பவர் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 7ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல்துறையினர் எனது மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்று கொலை செய்யும் நோக்கில் கடுமையாகத் தாக்கியதில் எனது மகனின் கை, கால்களில் பலத்த காயமடைந்து உள்ளார். மேலும், அவனது காலில் போலீசார் கொலை செய்யும் நோக்கில் சுட்டு உள்ளனர்.

அவரை காவல்துறையினர் முக்கூடல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவரை பார்க்க நானும் எனது தாய் உறவினர்கள் சென்றபோது காவல்துறையினர் பார்க்க விடாமல் தடுத்ததாகவும், இதனால் நாங்கள் வீட்டிற்குத் திரும்பி வந்த நிலையில் 8ஆம் தேதி இரவு 11 மணி போல் காவல்துறையினர் எங்கள் வீட்டிற்கு வந்து எனது தாய் மற்றும் எனது சகோதரரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எனது மகனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறி அவர்களிடம் கையொப்பம் பெற்றுள்ளனர்.

மறுநாள் எனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கால் அகற்றப்பட்டு இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இந்த நிலையில் 11ஆம் தேதி எனது மகன் இறந்து விட்டதாகத் தகவல் கூறினர். மேலும், இந்த பிரச்சனையும் செய்யாமல் எனது மகனின் உடலை வாங்கிச் செல்லும்படி காவல்துறையினர் என்னை மிரட்டினர்.

எனது மகனைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தாக்குதல் நடத்திய வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனது மகன் இறப்பு தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வீரவநல்லூர் காவல் நிலையம், முக்கூடல் அரசு மருத்துவமனையில் சிசிடிவி காட்சி பாதுகாத்து வைக்கவும் மேலும் துப்பாக்கி மற்றும் துணை தாக்கிய ஆயுதங்கள் மற்றும் ரத்தக்கரை படிந்த காவல்துறையின் ஆடைகளைப் பாதுகாத்து வைக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சுகுமார குருப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதி மனுதாரர் புகார் குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:அண்ணாமலையா? பழனிசாமியா? 2024 தேர்தலின் நாயகன் யார்?

ABOUT THE AUTHOR

...view details