தமிழ்நாடு

tamil nadu

சி.வி.சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு தடை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 5:22 PM IST

Ex Minister C V Shanmugam: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc-stay-defamation-charges-against-former-minister-cv-shanmugam
அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிராகத் தமிழக அரசின் அவதூறு வழக்கிற்குத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை: கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சில கருத்துக்களை கூறியிருந்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:"திமுகவின் கர்வம் அகற்றப்பட வேண்டும்" - குமரி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details