தமிழ்நாடு

tamil nadu

பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்து; ஹெச்.ராஜா மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்ய மறுப்பு! - Chennai High Court

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 6:29 PM IST

Madras High Court: பெண்களுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை
சென்னை

சென்னை: தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் காவல்துறை, ஹெச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக அவதூறாகப் பேசுதல், பொது அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 3 மாதங்களில் முடிக்கச் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் ஹெச்.ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன், இந்த பதிவைப் பதிவிட்டது நீங்களா? என ஹெச்.ராஜா தரப்புக்குக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பில் "ஆம்" என பதிலளிக்கப்பட்டது.

பின்னர் ஹெச்.ராஜாவிற்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையைச் சந்திக்க அறிவுறுத்தி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டை எண்ணக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details