தமிழ்நாடு

tamil nadu

துணை மருத்துவ கவுன்சில் தலைவர்களை 2 மாதங்களில் நியமிக்கவும் - சென்னை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 7:08 AM IST

Madras high court: தமிழ்நாடு துணை மருத்துவ கவுன்சில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை இரண்டு மாதங்களில் நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras high court
மருத்துவ கவுன்சில் தலைவர்கள் உறுப்பினர்களை 2 மாதங்களில் நியமிக்க உத்தரவு

சென்னை:நாடு முழுவதும் உள்ள மருத்துவ ஆய்வகங்களை முறைப்படுத்தும் வகையில், மத்திய அரசு கடந்த 2010ஆம் ஆண்டு மருத்துவ ஆய்வகங்கள் பதிவு மற்றும் முறைப்படுத்தல் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டப்படி, அனைத்து மாநிலங்களிலும் துணை மருத்துவ கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் என்றும்

தமிழகத்தில் உரிய தகுதியைப் பெறாத நபர்கள் மூலம் ஆய்வகங்கள் நடத்தி, மக்களின் உயிருடன் விளையாடுவதால், துணை மருத்துவ கவுன்சில் அமைக்க உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு மருத்துவ ஆய்வகங்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று (ஜன.30) விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்படி உரிய விதிகளை வகுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி, தமிழ்நாடு துணை மருத்துவ கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டத்தில் ஆறு மாதங்களில் கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டிலேயே மருத்துவ வசதிகளில் முன்னோடி மாநிலம் தமிழகம் எனக் கூறும் அரசு, மத்திய அரசின் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு துணை மருத்துவ கவுன்சில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை இரண்டு மாதங்களில் நியமிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த கவுன்சில் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ ஆய்வகங்களில் தகுதியானவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வகங்களில் விதிமீறல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:தந்தையின் அறுவை சிகிச்சையின் போது மகளுக்கு பாலியல் தொல்லை; வார்டு பாய்க்கு 5 ஆண்டு கடுங்காவல்!

ABOUT THE AUTHOR

...view details