தமிழ்நாடு

tamil nadu

சோழர் கால கோபுரத்துடன் கும்பகோணம் ரயில் நிலையம்… அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பணிகள் தொடக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 8:30 PM IST

Kumbakonam Railway Station: கும்பகோணம் ரயில் நிலையம் ரூபாய் 120 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணிகளை பிரதமர் மோடி இன்று (பிப்.26) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

கும்பகோணம் ரயில் நிலையம்
கும்பகோணம் ரயில் நிலையம்

தஞ்சாவூர்:இந்தியாவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை மறு சீரமைக்க அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 41 ஆயிரம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டத்தினை பிரதமர் மோடி இன்று (பிப்.26) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இரண்டாம் கட்டமாக 554 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மோடி இன்று (பிப்.26) அடிக்கல் நாட்டிய 554 ரெயில் நிலையங்களில் தமிழகத்தில் 34 ரயில் நிலையங்கள் நவீனமாக மேம்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் கும்பகோணம் ரயில் நிலைய புனரமைப்பு பணிகளுக்காக கல்வெட்டினை தென்னக ரயில்வே திருச்சி கோட்ட அலுவலர்களுடன் இணைந்து பாஜகவினர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நடனமாடினர்.

சிறப்பம்சங்கள்:கும்பகோணம் ரயில் நிலையம் சுமார் ரூபாய் 120 கோடியே 67 லட்சத்தில் புனரமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்னும் 2 ஆண்டுகளில் இப்பணிகள் முழுமை பெறும் எனக் கூறப்படுகிறது. கும்பகோணம் ரயில் நிலையம் முகப்பு, சோழர் கால கோபுரத்துடன் காட்சியளிக்கும், 3 தளங்களுடன் 12,600 சதுர அடி கொண்ட கட்டிடத்துடன் பிரமாண்டமாக அமையும் வண்ணம் சீரமைக்கப்படுகிறது.

26 பெட்டிகள் நிறுத்தும் வசதியுடன் நடைமேடைகள் விரிவாக்கப்படுகின்றன. மேலும் 5 நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள், 6 மின் தூக்கியும் நிறுவப்படுகிறது. பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், பயணிகள் ஓய்வறைகள், உணவகங்கள், ஏடிஎம், சுற்றுலா தகவல் மையம், டாக்ஸி புக்கிங் மையம் ஆகியவை அமைய உள்ளது.

இதையும் படிங்க:விண்வெளி ஆராய்ச்சியில் குவியப்போகும் வேலை வாய்ப்பு - மயில்சாமி அண்ணாதுரை சொல்வது என்ன?

ABOUT THE AUTHOR

...view details