தமிழ்நாடு

tamil nadu

ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா, புதுச்சேரி கூடுதல் பொறுப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 11:10 AM IST

Governor C.P Radhakrishnan: தெலங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்துள்ள நிலையில், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்று (மார்ச் 18) திடீரென தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக தமிழிசை சௌந்தரராஜன் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.

மேலும், தமிழிசை செளந்தரராஜன் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தென்சென்னை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய தொகுதியில் ஏதேனும் ஒன்றில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜனின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பணிகளை ஜார்கண்ட் ஆளுநர் பணிகளுடன் சேர்த்து சி.பி.ராதாகிருஷ்ணன் கவனிப்பார் என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழிசை செளந்தரராஜன் ஆளுநர் பதவியை துறந்தது ஏன்? - தேர்தலில் வெல்வாரா?

ABOUT THE AUTHOR

...view details