தமிழ்நாடு

tamil nadu

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து; 4 பேர் உயிரிழப்பு.. அரியலூரில் சோகம்! - Ariyalur Car accident

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 8:00 PM IST

Car Accident In Thanjavur: அரியலூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரியின் பின்னால் கார் மோதியதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கார் விபத்து புகைப்படம்
கார் விபத்து புகைப்படம் (credit to ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகரப் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (24), புவனேஷ் கிருஷ்ணசாமி (18), செல்வா (17) மற்றும் சண்முகம் (23), ஆகிய நான்கு பேரும், அரியலூரில் ஹோமம் நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பின்னர் தஞ்சாவூர் நோக்கி காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது, ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி நிறுத்தப்பட்டு இருந்துள்ளது.

அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்னால் மோதியதில், நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தகவல் உடனடியாக போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நான்கு பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க:மேற்கு வங்க ஆசிரியர்கள் நியமன ஊழல் விவகாரம்: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை - உச்ச நீதிமன்றம்! - West Bengal Teacher Job Scam

ABOUT THE AUTHOR

...view details