தமிழ்நாடு

tamil nadu

பெரியார் படத்தில் ராஜாஜியாக நடித்த இயக்குநர் சுரேஷ் குமார் நெல்லையில் காலமானார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 3:50 PM IST

Cinema Director SureshKumar dead: பெரியார் படத்தில் ராஜாஜியாக நடித்தவரும், சினிமா இயக்குநருமான சுரேஷ் குமார் நெல்லையில் திடீரென மரணமடைந்தார்.

நெல்லையில் சினிமா இயக்குனர் திடீர் மரணம்
நெல்லையில் சினிமா இயக்குனர் திடீர் மரணம்

சென்னை: பெரியார் படத்தில் ராஜாஜியாக நடித்தவரும், சினிமா இயக்குநருமான சுரேஷ் குமார், நெல்லையில் திடீர் மரணமடைந்த நிலையில், அவரது உடலை பெறுவதற்காக அவரது உறவினர்கள் நெல்லை விரைந்துள்ளனர். சென்னை செம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆர்த்தி குமார். இவரது இயற்பெயர் சுரேஷ் குமார். இவர் திரைத்துறையில் இயக்குநர், நடிகர் என பணியாற்றி வந்துள்ளார். சத்யராஜ் நடிப்பில் வெளியான அழகேசன், சவுண்ட் பார்ட்டி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், ஞான ராஜசேகரன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்த 'பெரியார்' படத்தில் சுரேஷ்குமார் ராஜாஜி கதாபாத்திரத்தில் நடித்து, பலரது பாராட்டுக்களையும் பெற்றார். பெரியார் படத்தின் மூலம் நடிகராகவும், அறியப்பட்டார் இயக்குநர் சுரேஷ்குமார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சுரேஷ் குமார், சித்த மருத்துவ சிகிச்சைக்காக கடந்த வாரம் திருநெல்வேலிக்குச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியபடி, சித்த மருத்துவ சிகிச்சை எடுத்த வந்துள்ளார் இயக்குநர் சுரேஷ்குமார். இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப்.4) திடீரென லாட்ஜில் மயங்கி விழுந்துள்ளார். அவருடன் உறவினர்கள் யாரும் இல்லாததால், லாட்ஜ் ஊழியர்கள் சுரேஷ்குமாரை மீட்டு, பாளையங்கோட்டையில் உள்ள ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல், சுரேஷ்குமார் நேற்று (பிப்.5) உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உடற்கூராய்விற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும், சுரேஷ்குமாரின் மறைவு குறித்து போலீசார் சென்னையில் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் தகவலின்படி, இயக்குநர் சுரேஷ்குமாரின் உடலை பெற்றுச் செல்வதற்காக, அவரது உறவினர்கள் இன்று (பிப்.6) நெல்லை சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து, நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சட்லஜ் நதியில் கவிழ்ந்த கார்.. சைதை துரைசாமி மகன் மாயம்; தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி சன்மானம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details