தமிழ்நாடு

tamil nadu

'நாதக கட்சி சின்னம் முதல் பாமக-பாஜக கூட்டணி வரை சீமானுடன் சிறப்பு நேர்காணல்! - lok sabha election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 3:15 PM IST

Updated : Apr 4, 2024, 3:42 PM IST

NTK Seeman: தமிழகத்தைப் பொருத்தவரை நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றி பெறாது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

etv-bharat-tamil-exclusive-interview-with-ntk-chief-coordinator-seeman
'நாதக கட்சி சின்னம் முதல் பாமக-பாஜக கூட்டணி வரை சீமானுடன் சிறப்பு நேர்காணல்!

'நாதக கட்சி சின்னம் முதல் பாமக-பாஜக கூட்டணி வரை சீமானுடன் சிறப்பு நேர்காணல்!

சென்னை:தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழகத்தில் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தைக் கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. இந்நிலையில் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நாதக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் இரா.கார்த்திகேயனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சிந்தாதிரிப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த விறுவிறுப்பான தேர்தல் நேரத்தில் பரபரப்பான கேள்விகளுடன் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்குப் பிரத்தியேக பேட்டியளித்துள்ளார். அவரிடம் நாம் முன்வைத்த கேள்விகளுக்கு அதற்கு அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு.

உங்கள் சின்னத்தை மக்களிடத்தில் சேர்த்து விட்டீர்களா?எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்று நினைக்கின்ற மக்கள் எங்கள் சின்னத்தைத் தேடி வந்து வாக்கு செலுத்துவார்கள். ஒரே நாளில் சின்னத்தினை மக்களிடம் கொண்டு சேர்த்து விட முடியாது.

டிடிவி தினகரனை விமர்சிக்கும் சீமான்..பாமகவை விமர்சிப்பது இல்லையே ஏன்?பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நான் சொல்லவில்லை. அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரும் அல்ல, ஆனால் டிடிவி தினகரன், கூட்டணியில் இணைந்திருக்கக் கூடாது என்பது தான் என்னுடைய கோபம்.நாங்கள் சசிகலா அவர்களைப் பாசத்தில் சின்னம்மா என்கிறோம்.

ஆனால் அவர்கள் உண்மையில் உங்களுக்குச் சித்திதானே, அவர்களைச் சிறையில் வைத்தது யார் இந்த பா.ஜ.க ஆட்சி தான், உங்களைச் சிறையில் வைத்தது யார் பாஜகதான். அன்றைக்கும் சசிகலாவிற்கும்-டிடிவி தினகரனுக்கும் குரல் கொடுத்தவன் நான்தான்.

அந்த உரிமையில் சொல்கிறேன் பாஜகவைப் பலப்படுத்த வேண்டும் என அவர்களுடன் கூட்டணி வைக்காதீர்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்குப் பதிலாகத் தனித்து நின்று இருக்கலாம், அல்லது வேறு கட்சியோடு கூட்டணி வைத்திருக்கலாம். பாஜகவுடன்- டிடிவி தினகரன் இனைந்து வலிமை சேர்ப்பது என்பது பேராபத்து என்றார்.

ஏன் யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை ?என்னுடைய கொள்கை வேறு, திராவிட கட்சிகளின் கொள்கை வேறு அதனால் ஒருபோதும் கூட்டணி என்ற பேச்சுக்கு இடம் கிடையாது. என்னோடு ஒத்துப் போவார்கள் வேண்டுமானால் கூட்டணிக்கு வரலாம் என்றார்.

பாஜக கூட்டணி வெற்றி பெறுமா?தமிழகத்தைப் பொருத்தவரை நடைபெறவிருக்கின்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றி பெறாது, நீங்கள் வேண்டுமானால் பொறுத்து இருந்து பாருங்கள் என்றார்.

சீமானுக்கு ஓட்டும், சின்னமும் இல்லை என அண்ணாமலை விமர்சித்துள்ளார் இது குறித்து உங்கள் கருத்து?
விவசாய சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு இல்லையா? அல்லது நீங்கள் எடுத்துக் கொண்டீர்களா? எனக்கு விவசாய சின்னம் கொடுக்கக் கூடாது என பயந்து திட்டமிட்டு வேலையைச் செய்துள்ளார்கள். நாம் தமிழர் கட்சிக்கு விவசாய சின்னம் கிடைக்காமல் போனதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அண்ணாமலை, ராமர் கோயிலில் வந்து சத்தியம் செய்வாரா? என கேள்வி எழுப்பிய அவர் தொடர்ந்து பேசுகையில், "தேசிய மலரைச் சின்னமாக வைத்துள்ளீர்கள் என்ற திமிரில் பாஜக ஆடுகிறார்கள். பாஜக என்பது அவர்களுடைய கட்சி கிடையாது, நீங்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். ஆனால் நான் அப்படியல்ல இது என்னுடைய கட்சி ரத்தமும் வியர்வையும் சிந்தி நான் உருவாக்கிய கட்சி, நான் கூறுவது போல் வேறு யாரும் சொல்லமுடியாது முதல்வர் ஸ்டாலினோ? எடப்பாடியோ சொல்ல முடியாது" என அவர் கூறினார்.

இதையும் படிங்க:பாஜக பிரசாரத்தில் எம்ஜிஆர் பாடல் ஒலிப்பது எப்படி?- அதிரடி கேள்விகளுக்கு அட்டகாச பதிலளிக்கும் நயினார் நாகேந்திரன் - NAINAR NAGENDRAN

Last Updated :Apr 4, 2024, 3:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details