தமிழ்நாடு

tamil nadu

மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து மூதாட்டி கடலில் மூழ்கி உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 2:27 PM IST

England old woman dead: இங்கிலாந்து நாட்டில் இருந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த 84 வயது மூதாட்டி கடலில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான மாமல்லபுரத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூதாட்டி பிரிட்ஜ்ட் டாயலர் (84) என்பவர், தனது மகன் ரூபார்ட் டாயலர் (58) என்பவருடன், இங்கிலாந்தில் இருந்து கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளார்.

இதன் பின்னர், அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்து சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டு வந்து உள்ளனர். இந்த நிலையில், நேற்று மதியம் சுமார் 1 மணியளவில், மாமல்லபுரம் ஒத்தவாடை தெரு பகுதியில் உள்ள கடலில் மூதாட்டியும், அவரது மகனும் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக மூதாட்டி கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கி மாயமாகி உள்ளார். இவ்வாறு மாயமான மூதாட்டி பிரிட்ஜ்ட் டாயலரை, காவல் துறையினர், தீயணைப்புத் துறையின் உதவியுடன் தேடி வந்து உள்ளனர். இந்த நிலையில், மூதாட்டி இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளார்.

இது குறித்து அறிந்த காவல் துறையினர், மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், மூதாட்டியின் உயிரிழப்பு தொடர்பாக மாமல்லபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல், மூதாட்டியின் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்த பின், அவரின் உடலை எம்பார்மிங் செய்து, இங்கிலாந்து நாட்டிற்கு கொண்டு செல்ல அவரின் மகன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:அமெரிக்காவில் இந்திய மாணவர் சடலமாக மீட்பு! தொடரும் இந்தியர்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள்!

ABOUT THE AUTHOR

...view details