தமிழ்நாடு

tamil nadu

"தன்னைப் பற்றி பேசியதை உதயநிதி ஒப்புக் கொண்டுள்ளார்” - எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 3:14 PM IST

Edappadi Palanisamy: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை நிராகரிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Chennai
சென்னை

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேடிக் கொண்டிருப்பதாகவும், கோடநாடு கொலைம் கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஒளிந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக உதயநிதிக்கு எதிராக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி குறித்து பேச உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிராகரிப்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடப்பாடி பழனிசாமி சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன்னைப் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும், எனவே அவர் பேசியது அவதூறு கருத்தா, இல்லையா என்பது விசாரணையில்தான் முடிவு செய்ய முடியும் என்பதால், உதயநிதிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை நிராகாரிக்கக் கூடாது என தெரிவிக்கக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:"ஜாபர் சாதிக் விடுதலைக்கு காரணம் எடப்பாடி நியமித்த அரசு வழக்கறிஞர்” - ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details