தமிழ்நாடு

tamil nadu

தேனியில் பரவும் செவட்டை நோயைக் கட்டுப்படுத்த பருத்தி விவசாயிகள் கோரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 12:03 PM IST

Cotton Cultivation: செவட்டை நோய் தாக்குதல் மற்றும் அஸ்வினி பூச்சி தாக்குதலால் பருத்தி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோயைக் கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பருத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Cotton Cultivation
தேனியில் பரவும் செவட்டை நோய்யைக் கட்டுப்படுத்த பருத்தி விவசாயிகள் கோரிக்கை

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சுற்றியுள்ள குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, கோவில்புரம், மேல்மங்கலம், காமக்காபட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான மானாவாரி நிலங்களிலும், நீர்ப்பாய்ச்சியின் நிலங்களிலும், கடந்த ஆண்டு பெய்த பருவ மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிக அளவில் பருத்தியைப் பயிரிட்டு இருந்தனர்.

மேலும், கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி விலை ரூ.100-ஐத் தாண்டி விற்பனையானதால், இந்த ஆண்டு மானாவாரி விவசாயத்தில் விவசாயிகள் அதிக அளவில் பருத்தியைப் பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில், பருத்தி நன்றாக வளர்ந்து பிஞ்சுகள் விட்டு காய் பருவமடையும் சூழலில், பருத்தி பயிர்களில் செவட்டை நோய் தாக்குதல் மற்றும் அஸ்வினி பூச்சிகளின் தாக்குதலால் பருத்தி பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து, விவசாயிகளுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் சூழலை உருவாகியுள்ளது.

மேலும், இந்த நோய் தொடர்ந்து பரவி, பருத்தி பயிரை தாக்கி முற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பருத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோய் தாக்குதலால் பருத்தி பயிர்கள் பாதிப்படைந்துள்ளது குறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பெரியகுளம் பகுதியில் நேரில் சென்று கள ஆய்வு செய்து, நோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தேர்தல் பத்திரமுறை ரத்து - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details