தமிழ்நாடு

tamil nadu

அடுத்தடுத்த சிக்கலில் சுந்தரா டிராவல்ஸ் பட நாயகி.. டிராவல்ஸ் உரிமையாளரைத் தாக்கியதாக புகார்! - Complaint against actress Radha

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 10:05 AM IST

Complaint against Actress Radha: பிட் காயின் விவகாரமாக டிராவல்ஸ் உரிமையாளரைத் தாக்கியதாக சுந்தரா டிராவல்ஸ் திரைப்பட கதாநாயகி ராதா மற்றும் அவரது மகன் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:சென்னை நெற்குன்றத்தில் வசித்து வருபவர், முரளி கிருஷ்ணன். இவர் சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் டிராவல்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். முரளி கிருஷ்ணனும், சுந்தரா டிராவல்ஸ் திரைப்பட கதாநாயகி ராதாவும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் முரளி கிருஷ்ணன், ராதாவின் மகன் துவாரகேஷிடம் பிட் காயினில் (BIT COIN) முதலீடு செய்வதற்காக 90 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால், சில ஆண்டுகள் கழித்த நிலையில், துவாரகேஷ் வாங்கிய பணத்தைக் கொடுக்காததால், நேற்று முரளி கிருஷ்ணன் அலுவலகத்தில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அது கைகலப்பாகவும் மாறி உள்ளது.

அப்போது முரளி கிருஷ்ணனை, நடிகை ராதா மற்றும் அவரது மகன் துவாரகேஷ் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முரளி கிருஷ்ணன், ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முரளி கிருஷ்ணன், சுந்தரா டிராவல்ஸ் திரைப்பட கதாநாயகி ராதா மற்றும் அவரது மகன் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வடபழனி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, கடந்த மார்ச் 14ஆம் தேதி பிரான்சிஸ் என்ற இளைஞர் மீது நடிகை ராதா மற்றும் அவரது மகன் துவாரகேஷ் தாக்கிய வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சித்த மருத்துவர் குடும்பத்துடன் மோதல்.. சென்னை இரட்டைக்கொலை வழக்கில் வடமாநில இளைஞர் கைது! - Chennai Double Murder Case

ABOUT THE AUTHOR

...view details