தமிழ்நாடு

tamil nadu

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 31வது முறையாக நீட்டிப்பு! - Senthil balaji Bail Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 6:49 PM IST

Senthil Balaji case: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V. ஆனந்த் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி D.V.ஆனந்த் உத்தரவிட்டார்.

இதன் மூலம் 31வது முறையாகச் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழகத்தில் கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! - Eagles Conservation Centre

ABOUT THE AUTHOR

...view details