தமிழ்நாடு

tamil nadu

சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மேயர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 10:05 AM IST

Mayor Priya Car Accident: சென்னை மேயர் பிரியா பயணித்த கார் பூந்தமல்லியை அடுத்துள்ள சென்னீர்குப்பம் பகுதியில் விபத்தில் சிக்கியதில், மேயர் பிரியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேயர் பிரியா
மேயர் பிரியா

சென்னை:சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை குழு தயாரிப்பில் முக்கிய பொறுப்பில் உள்ள நிலையில், வேலூரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்திற்குச் சென்று விட்டு, நேற்று இரவு (பிப்.23) காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் மேம்பாலத்தில் வந்தபோது, முன்னால் சென்ற கார் திடீரென நின்றுள்ளது.

அப்போது வேகமாக வந்த பிரியாவின் காரில் பிரேக் போட்டதால், பின்னால் வேகமாக வந்த லாரி அவரது காரின் பின் பக்கம் மோதி உள்ளது. இதில் முன்னால் சென்ற காரின் மீது பிரியாவின் கார் மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் பிரியா சென்ற காரின் முன் மற்றும் பின் பகுதிகள் நொறுங்கி சேதமடைந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மேயர் பிரியா அலறியபடி சத்தமிட்டதைத் தொடர்ந்து, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, மேயர் பிரியாவை காரில் இருந்து மீட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மேயர் பிரியாவிற்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. காரின் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேயர் பிரியா சிறிது நேரம் அங்கே நின்ற நிலையில், பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமிக்கு சொந்தமான கார் வந்ததையடுத்து, அந்த காரில் ஏறி அவர் உடனடியாக வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்துக்கு காரணமான லாரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேயர் பிரியா சென்ற காரின் முன் மற்றும் பின்பகுதி பலத்த சேதம் அடைந்து கண்ணாடிகளும் உடைந்து நொறுங்க உள்ளது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதையும் படிங்க:கும்பகோணம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்: டெல்லி சலோ போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிக்கு அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details