தமிழ்நாடு

tamil nadu

வீட்டில் ஆய்வு செய்தபோது வேதிப்பொருள் வெடித்து 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு! - student death in chennai

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 7:51 PM IST

Student death in Chennai: கொளத்தூரில் வீட்டில் பாஸ்பரஸ் உள்ளிட்ட ரசாயனப் பொருட்களை வைத்து ஆய்வு செய்தபோது, அவை எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில் 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோதகத்தை ஏற்படுத்தியுள்ளது.

student death in chennai
student death in chennai

சென்னை:கொளத்தூர் முருகன் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் அரிகரன். இவர் சென்னை மேற்கு மாம்பலத்தில் பேட்டரி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஆதித்ய பிரணவ். 17 வயதான இவர், முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

12ஆம் வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்து படித்து வரும் அந்த மாணவன், அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது. இதையடுத்து, ஆன்லைன் மூலமாக பாஸ்பரஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்களை வாங்கி, அதை வைத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதை அவர் வழக்கமாக வைத்துக் கொண்டு இருந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மதியம் அதேபோல் ஆதித்யா பிரணவ், அவரது வீட்டில் பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு வேதிப் பொருட்களை வைத்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கெமிக்கல் மற்றும் பேட்டரி வெடித்து சிதறியதில், ஆதித்ய பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வெடி விபத்தில் வீடும் லேசான சேதமடைந்துள்ளது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த நிலையில், உடனடியாக போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், கொளத்தூர் போலீசார் மற்றும் கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியன் சம்பவ இடத்திற்குச் சென்று, மாணவனின் உடலை கைப்பற்றி, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கோவையில் அண்ணாமலை போட்டி.. வெளியானது தமிழ்நாடு பாஜக வேட்பாளர் பட்டியல்! - Annamalai From Coimbatore

ABOUT THE AUTHOR

...view details