தமிழ்நாடு

tamil nadu

திருப்பத்தூரில் அண்ணாமலை உள்பட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு.. காரணம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 11:38 AM IST

Updated : Feb 10, 2024, 5:06 PM IST

BJP case file: ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில், அண்ணாமலையை வரவேற்க பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றாத விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

BJP case file
திருப்பத்தூரில் பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்டார். அப்பொழுது, அவரை வரவேற்க பாஜகவினர் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்தனர்.

இந்நிலையில், அண்ணாமலை வந்து சென்று ஒரு வார காலம் ஆன நிலையில், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் அண்ணாமலையை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்கள் இன்னும் அகற்றப்படவில்லையென, வாணியம்பாடி கிராம நிர்வாக அலுவலர் திலீப் குமார் கொடுத்த புகாரின் பேரில், பாஜக நிர்வாகிகளான வேலு மற்றும் பிரதீப் ஆகியோர் மீது வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஆம்பூர் நகராட்சி அமைப்பு ஆய்வாளர் அலமேலு கொடுத்த புகாரின் பேரில், ஆம்பூர் பாஜக இளைஞர் அணித் தலைவர் சரத்குமார் மீது ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆம்பூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்ட போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 12 பேர் மீது ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புதுச்சேரியில் மலர்கண்காட்சி தொடங்கியது - ஒரு லட்சம் மரக்கன்றுகள் விற்பனை செய்ய இலக்கு!

Last Updated : Feb 10, 2024, 5:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details