தமிழ்நாடு

tamil nadu

வேலூர் நாதக வேட்பாளர் உள்பட 103 பேர் வழக்குப்பதிவு! - Vellore NTK Candidate case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 8:54 PM IST

Vellore NTK Candidate: நாம் தமிழர் கட்சியின் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் மகேஷ் ஆனந்த் உள்பட 103 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மகேஷ் ஆனந்த், இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதற்கு முன்னதாக 103க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் ஒன்றிணைந்து, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, திருவள்ளுவர், அம்பேத்கர், ராஜராஜ சோழன், மருது பாண்டியர்கள் போல் வேடமிட்டு, இருச்சக்கர வாகனத்தில் நாம் தமிழர் கட்சி கொடியுடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, வேலூர் பழைய பேருந்து நிலையம் திருவள்ளூர் சிலை அருகில் இருந்து, சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை தேர்தல் விதிகள் மீறி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அனுமதியின்றி பேரணியாக சென்றதாக பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மகேஷ்ஆனந்த், மாவட்ட பொறுப்பாளர்கள் விக்னேஷ், மணிராஜ் உட்பட 75 ஆண்கள், 25 பெண்கள் என மொத்தம் 103 பேர் மீது தேர்தல் விதியை மீறியதாக 3 பிரிவுகளின் கிழ் வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:அண்ணாமலையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - முழு விவரம்! - Property Value Of Annamalai

ABOUT THE AUTHOR

...view details