தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - பாஜகவின் திருச்சி சூர்யா அளித்த விளக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 12:11 PM IST

Trichy Surya Siva: பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.

bjp Surya slams dravidian parties
திருச்சி சூர்யா

திருச்சி சூர்யா செய்தியாளர்கள் சந்திப்பு

திருச்சி:திருச்சி கே.கே.நகர் பகுதியில் பாஜக சார்பாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும். நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியை பெறும்.

இன்றை நாள் வரை திராவிட கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பாஜக அமைத்துள்ள வலுவான கூட்டணியாகும். பிரதமர் மோடி இன்னும் பலமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். தமிழ்நாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்ட அரசு நிகழ்வுகள் மற்றும் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் தேவையற்ற வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒன்று என நினைப்பவர்தான் மோடி. தமிழ்நாட்டில் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் தலை தூக்கி உள்ளது இதற்கு முக்கிய காரணம் திமுக அரசு தான். திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், அவருடன் நெருங்கிய நட்புறவில் இருந்த திமுக நிர்வாகிகள் குடும்பங்கள் அனைவரும் இந்த போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு உடந்தையாக உள்ளனர் என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவித்தால் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மிகப்பெரிய எழுச்சியைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்ட திமுகவில் என்ன சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அதற்கு திமுக நிர்வாகியுமான கவுன்சிலருமான காஜாமலை விஜய் தான் காரணமாக இருப்பார். எனது தந்தை எம்பி திருச்சி சிவா வீட்டை தாக்கியது, கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பெண் போலீசாரை தாக்கியது,

காஜாமலை பகுதியில் வங்கியை கையகப்படுத்த சென்ற டி.ஆர்.ஓ தாக்கப்பட்டதற்கும் இவர்தான் ஏ1 குற்றவாளி இதேபோல் மாமன்ற கூட்டத்தில் மேயரை ஆபாச வார்த்தைகள் பேசி அந்த வீடியோக்களும் வெளியே வந்துள்ளது. எனவே கண்டிப்பாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜயை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவையில் இன்று மோடியின் 'ரோட் ஷோ': பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details