தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் போக்சோ சட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 3:51 PM IST

Youth arrested in POCSO: திருநெல்வேலி மாவட்ட பகுதியில் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமிகள் மற்றும் பெண்கள் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர்
சிறுமிகள், இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு

திருநெல்வேலி: பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து வந்த ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீசார், அவரை சிரையில் அடைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தங்கியுள்ள பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் அவர் பழகி வந்துள்ளார். தொடர்ந்து, அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி உள்பட இரண்டு இளம்பெண்கள் மற்றும் அவரது பெற்றோர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நெல்லை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநரை தேடி வந்துள்ளனர். இதையடுத்து, நேற்று போலீசார் அவரை பிடித்த நிலையில், கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இதுபோல பல பெண்களை ஏமாற்றி அவர் பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்துள்ளது.

அதில், தற்போது மூன்று பேர் புகார் அளித்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விசாரணைக்கு பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: மாமல்லபுரத்தில் உலோக சிலைகள் பதுக்கல்.. முதலமைச்சர் குடும்பம் பற்றி அவதூறு கருத்து - சென்னை கிரைம் செய்திகள்!

ABOUT THE AUTHOR

...view details