தமிழ்நாடு

tamil nadu

ஊட்டிக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு - எப்போது தெரியுமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 10:35 PM IST

The Nilgiris Special Hills train: தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு மலை ரயில் இயக்கம் தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோடைக்காலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் மலை ரயில் இயக்கம்
கோடைக்காலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் மலை ரயில் இயக்கம்

நீலகிரி:கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் மலை ரயில் போக்குவரத்து இயங்கி வருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, மேலும் கூடுதலாக மலை ரயில்களை இயக்குவதென தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

அந்த வகையில், வருகின்ற மார்ச் 29ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை வாரம்தோறும் வெள்ளி முதல் திங்கள்கிழமை வரை 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது.

அந்த நாட்களில் குன்னூர் - ஊட்டி இடையே காலை 8.20 மணிக்கும், ஊட்டி - குன்னூர் இடையே மாலை 4.45 மணிக்கும் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது. இது தவிர, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்.

மேலும், ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இதே போல ஊட்டி - கேத்தி இடையே வெள்ளி முதல் திங்கள் வரை 4 நாட்களுக்கு காலை 9.45 மணி, காலை 11.30 மணி, மாலை 3 மணி என்ற இடைவெளிகளில் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும்.

ஊட்டி - குன்னூர் இடையேயான மலை ரயிலில் உள்ள 5 பெட்டிகளில் 80 முதல் வகுப்பு, 130 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 210 இருக்கைகள் அமையும். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான 4 ரயில் பெட்டிகளில் 40 முதல் வகுப்பு, 92 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 132 இருக்கைகள் இடம் பெற்றிருக்குமென தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:நாட்டின் முதல் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில்! ரூ.15,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைப்பு!

ABOUT THE AUTHOR

...view details