தமிழ்நாடு

tamil nadu

‘எடப்பாடி ஐயா தான் ஜெயிக்கணும்’.. சமயபுரம் கோயிலில் தீச்சட்டி எடுத்த கஞ்சா கருப்பு! - Lok Sabha Election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 3:57 PM IST

Actor Ganja Karuppu: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி, திரைப்பட நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்துடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

சமயபுரம் கோயிலில் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் கஞ்சா கருப்பு
சமயபுரம் கோயிலில் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் கஞ்சா கருப்பு

சமயபுரம் கோயிலில் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் கஞ்சா கருப்பு

திருச்சி:நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி, திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, குடும்பத்துடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

தீச்சட்டியுடன் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக வந்த கஞ்சா கருப்பு, தீச்சட்டி இறக்கம் குண்டம் அருகே வந்த போது, “ஆத்தா மாரியாத்தா, எடப்பாடி ஐயா எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்” என வேண்டி தீச்சட்டியை அக்னி குண்டத்தில் எறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததே பெரிய விஷயம்.

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் எல்லா தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி, குடும்பத்துடன் தீச்சட்டி, பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளேன். மேலும், திருச்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து உள்ளேன்.

பல்வேறு மாவட்டங்களில் தற்போது பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளேன். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வெற்றி பெற்று, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் முறையிட்டால் தானே நடக்கும்” என்றார். எதிர்கட்சியினர்கள் பாதந்தாங்கி பழனிசாமி என விமர்சிப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “காமெடி பண்ணுவது பண்ணிக்கொண்டுதான் இருப்பார்கள். ஜெயிக்க பிறந்தவர்கள், ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

எடப்பாடி பழனிசாமி ஐயா தலைமையிலான அதிமுகவினர், என்றைக்கும் ஒற்றைப் பரம்பரை தான். தனித்து நின்று ஜெயித்துதான் பழக்கம். கூட்டணி அமைத்து நின்று பழக்கம் இல்லை. என்றைக்கும் எடப்பாடி, எடப்பாடி தான். அவர் ஒரு விவசாயி, அவருக்கு விவசாயிகளுடைய கஷ்டங்கள், நஷ்டங்கள் தெரியும்.

அதனால் பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும். தூற்றுபவர்கள் தூற்றிக்கொண்டே இருக்கட்டும். ஜெயிப்பவர்கள் ஜெயித்துக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் எப்பொழுதுமே இரட்டை இலை தான். மத்தியிலும் இரட்டை இலை தான் அமைய வேண்டும் என்று தான் நாங்கள் நினைப்போம்” என்று பேசினார்.

இதையும் படிங்க:திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்.. திருச்சி ரோடு ஷோவில் ஜெ.பி.நட்டா பேச்சு - JP NADDA ROAD SHOW

ABOUT THE AUTHOR

...view details