தமிழ்நாடு

tamil nadu

நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்! - prisoner escaped from hospital

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 1:07 PM IST

Prisoner escaped from hospital: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணை கைது ஒருவர் தப்பி காவல்துறை கண்காணிப்பில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை அரசு மருத்துவமனையில் விசாரணைக் கைதி தப்பி ஓட்டம்
நெல்லை அரசு மருத்துவமனையில் விசாரணைக் கைதி தப்பி ஓட்டம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த பணகுடியைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் மணிகண்டன்(19). இவர், பணகுடி பகுதியில் நேற்று (புதன்கிழமை) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவர் ஆஜார் படுத்தப்பட்டதை அடுத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டிருந்தது

இதனிடையே, சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பே மணிகண்டன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, மணிகண்டன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர், உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன், மருத்துவமனை சிகிச்சை வார்டில் இருந்து இன்று (வியாழக்கிழமை) தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து, தப்பிச் சென்ற கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கடந்த திருவிழாவில் ஏற்பட்ட பகை.. இந்தாண்டு திருவிழாவில் பழிதீர்க்க முயற்சித்த சகோதரர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details