தமிழ்நாடு

tamil nadu

அண்ணா பல்கலைக்கழகத்தின் குறும்பட போட்டி: பழங்குடியின மாணவர்களின் படத்திற்கு பரிசு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 10:49 PM IST

tribal students short film won 2nd prize: பழங்குடியின மாணவர்கள் இயக்கிய குறும்படம் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய குறும்பட போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளது.

tribal students short film won the 2nd prize
வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர்கள் இயக்கிய குறும்படம்

சென்னை: கேரள மாநிலம் ஆனைகட்டி கோட்டத்துறை பகுதியில் உமா பிரேமன் என்பவர் அப்துல் கலாம் பெயரில் இலவச பள்ளி ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் அட்டப்பாடியை சுற்றியுள்ள பழங்குடியின கிராமங்களைச் சார்ந்த 150 மாணவர்கள் தங்கி இலவச கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் உள்ள தனித் திறமைகளைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்தவாறு அவர்களைத் தயார் செய்தும் வருகிறார் உமா பிரேமன். அந்த வகையில், இங்குப் பயிலும் மாணவர்களுக்குப் பழங்குடியின பாடல்கள் மற்றும் இசைக் கருவிகளை இசைக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்குக் குறும்படம் எடுக்கவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த பயிற்சியைப் பெற்ற மாணவர்கள் இதுவரை ஒரு ஆல்பம் சாங்கையும், குறும்படத்தையும் தயாரித்து இயக்கி உள்ளனர். இவ்வாறு இவர்கள் தயாரித்து இயக்கிய 'மிஸ்ஸிங் சாப்டர்' (Missing chapter) எனும் முதல் குறும்படமானது, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய குறும்பட விழாவில் போட்டிக்குத் தேர்வாகி பாராட்டுகளைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டது. அதில், சாலை குறித்து மாணவர்கள் எடுத்த குறும்படம் முதல் பரிசையும், அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் இயக்கிய 'மிஸ்ஸிங் சாப்டர்' குறும்படம் இரண்டாவது இடத்தையும் பிடித்தது.

இதனை அடுத்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும், அப்துல் கலாம் நினைவு பள்ளியில் 6ஆம் வகுப்பு பயிலும் பழங்குடியின மாணவர்களான சினிமோல், நிதீஸ், ஆகாஷ், தர்னீஷ், அமித்தா, ஜேம்ஸ் ஆகியோர் இந்த படத்தைத் தயாரித்து இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:KH 233 படம் கைவிடப்பட்டதா? விஜயை நெருங்குகிறாரா எச்.வினோத்? - வெளியான முக்கிய அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details