தமிழ்நாடு

tamil nadu

'விண்மீன்கள் ஒரு பார்வை' - தேனி தனியார் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 11:56 AM IST

ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற 'விண்மீன்கள் ஒரு பார்வை' என்ற நிகழ்ச்சியில் விலை உயர்ந்த தொலைநோக்கியில் பார்வையாளர்கள் வியப்புடன் விண்மீன்களை கண்டுகளித்தனர்

விண்மீன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற விண்மீன்கள் ஒரு பார்வை நிகழ்ச்சி
விண்மீன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற விண்மீன்கள் ஒரு பார்வை நிகழ்ச்சி

விண்மீன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற விண்மீன்கள் ஒரு பார்வை நிகழ்ச்சி

தேனி: ஆண்டிபட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 'விண்மீன்கள் ஒரு பார்வை' என்ற நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. வானியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் இந்நிகழ்ச்சிக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுடன் சேர்ந்து அப்பகுதி பொதுமக்களும் ஏராளமானோர் பள்ளிக்கு வந்தனர்.

முன்னதாக பள்ளியில் உள்ள வகுப்பறைகளில், விண்மீன்களின் மாதிரி வடிவங்கள் பிரதிபலிப்பு வண்ண காகிதங்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டது. அவை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வானத்தில் உள்ளவாறே வகுப்பறை மதில் சுவற்றில் செங்குத்தாக நிலைநிறுத்தி வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன.

அதேபோல் சூரிய குடும்பங்கள் குறித்தும், கோள்கள் மற்றும் அவை சுற்றும் விதம் குறித்தும் தெளிவாக பட விளக்கம் செய்யப்பட்டிருந்தது. மேலும் விண்வெளிக்கு ராக்கெட் மற்றும் விண்கலன்களின் மாதிரி மின் விளக்குகளுடன் அமைக்கப்பட்டிருந்தது.

அதில் விண்வெளி வீரரை போல் உள்ள மாதிரியில் உள்ளே சென்று தங்களது முகத்தை பொருத்தி பார்வையாளர்கள் விண்வெளி வீரரைப் போல் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இதற்கு அடுத்தபடியாக பள்ளிக்கு பெங்களூருவில் இருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரத்யேக தொலைநோக்கி வரவழைக்கப்பட்டிருந்தது.

அதில் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் விண்ணுலக விண்மீன்களை நேரில் ஒவ்வொன்றாக காட்டியபடியே விளக்கி கூறினார்கள். மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோர் மட்டுமல்லாது, ஆண்டிபட்டி பகுதியை சுற்றுவட்டார மக்களும் ஏராளமானோர் வந்து வரிசையாக நின்று தொலைநோக்கியில் விண்மீன்களையும் கோள்களையும் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

இதையும் படிங்க: மணீப்பூரில் உயிரிழந்த சிஆர்பிஃப் வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க தேனியில் நல்லடங்கம்

ABOUT THE AUTHOR

...view details